க்ரிஸ்பி ஃபிரைட் சிக்கன் (1)
0
தேவையான பொருட்கள்:
கோழி - 1 கிலோ
பொடியாக நுனுக்கிய மிளகாய் வற்றல் - 1 மேசைக்கரண்டி
வறுத்து பொடித்த மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
மைதா - 1 கப்
சோள மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்.
மாவு, பொடிகள், உப்பு எல்லாம் கலந்து வைக்கவும்.
ஒரு பாதி மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கரைக்கவும்.
அதில் சிக்கன் துண்டுகளை நன்றாக முக்கி, 4 - 6 மணி நேரம் ஃபிரிஜில் வைக்கவும்.
மீண்டும் எடுத்து மீதம் இருக்கும் கரைக்காத மாவில் பிரட்டி 10 - 15 நிமிடம் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.
இதை எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.