கோழி வறுவல் (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

பூண்டு - 8 பல்

இஞ்சி - ஒரு சின்ன துண்டு

எண்ணெய் - தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை ஆகியவற்றை அரைக்கவும்.

கோழியை பொடியாக நறுக்கி, மஞ்சள் தூள் போட்டு பிசறி கழுவவும். தண்ணீரை வடித்து விட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். அரைத்த விழுதையும், உப்பும் போடவும்.

கறி வெந்து தண்ணீர் வற்றியதும் கடாயில் எண்ணெய் விட்டு வெந்த கோழியை போட்டு சிறு தீயில் கிளறி நன்கு வறுபட்டவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: