கோழி வறுவல் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பிரட்டுவதற்கு:

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி

எண்ணெய் பொரிக்க - 3/4 கப்

செய்முறை:

கோழியை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் போக வடித்து எல்லா துண்டுகளிலும் கீறல் இட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் மிதமான தீயில் வைத்து ஒரு விசில் விடவும்.

குக்கரை திறந்தால் சிக்கனில் தண்ணீர் விட்டிருக்கும். அதனை வடித்து விடவும்.

பிறகு கொடுத்துள்ள மசாலாப் பொடிகளை அதன் மேல் தேய்த்து 2 மணிநேரம் ஊறவிடவும்.

பின் எண்ணெயை காயவைத்து அதில் வறுத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: