கோழி வறுவல் (1)
0
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
6. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழி தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும் (தண்ணீர் தேவையில்லை).
கோழி துண்டுகளை இந்த கலவையில் 1-2 மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து ஊற வைக்கவும் (மூடி போட்டு).
பின் கோழி துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.