கோழி தோரன்
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத கோழி - 500 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 3/4 கப்
மிளகாய் வற்றல் - 4
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து 1 சென்டி மீட்டர் அளவுள்ள துண்டுகளாக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி பொடியாக நறுக்கிய கோழி சேர்த்து வதக்கவும்.
கோழியின் நிறம் மாறியதும் மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
கோழி வெந்து தண்ணீர் வற்றியதும் அரைத்த கலவையை போட்டு தேவைப்பட்டால் உப்பு சேர்த்து இரண்டு, மூன்று நிமிடம் கிளறவும்.
தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.