கோழி சுக்கா வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கிலோ

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 10 பல்

தக்காளி - 1

மிளகாய் தூள்- 4 மேசைக்கரண்டி

மல்லி தூள் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

தாளிக்க:

பட்டை - 1

கிராம்பு - 1

அன்னாசிப்பூ - 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், 5 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்தவற்றை கோழியில் பிசறி வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, வெந்தயம் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி, கோழியை போட்டு வதக்கவேண்டும்.

10 நிமிடம் சிறு தீயில் வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறி ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவேண்டும்.

கறி வெந்து தண்ணீர் வற்றியவுடன் மிளகுத்தூள் சேர்த்து மேலும் 10 நிமிடம் சிறு தீயில் வதக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: