கோழி சுக்கா





தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி.
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி.
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி.
வினிகர் - 1 தேக்கரண்டி.
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி.
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி.
பொடியாக நறுக்கிய பூண்டு - 1/2 தேக்கரண்டி.
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறி, மிளகாய் தூள், வினிகர் 3/4 தேக்கரண்டி, 3/4 தேக்கரண்டி சோயா சாஸ், தனியாத் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு இவைகளைக் கலந்து குறைந்தது 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
வேறொரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில், 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்கி, அதனுடன், காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் மீதமுள்ள சோயா சாஸ், சர்க்கரை, வினிகர் இவைகளைக் கலந்து, 2 நிமிடம் வதங்கியவுடன், வறுத்தக் கோழியைக் கலந்து சூடாகப் பரிமாறலாம்.