கோழி குடல் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
கோழிக்குடல் - ஒரு கோழி சுத்தம் செய்தால் கிடைக்கும் அளவு
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 100 கிராம்
நெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குடலில் மிளகாய் தூள், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
வெங்காயத்தை நீள வாக்கில் அறிந்து கொள்ளவும் .
அடுப்பில் பொரிக்கும் சட்டியை வைத்து நெய் ஊற்றி அதில் வறட்டி வைத்த குடல், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.
நன்றாக மணம் வந்து, வெங்காயம் பொரிந்ததும் இறக்கி பரிமாறவும்.