கேரள சிக்கன் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

வெங்காயம் - 1 (பெரியது)

குடைமிளகாய் - 2

பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி

துருவிய இஞ்சி - 2 தேக்கரண்டி

நறுக்கிய மிளகாய் - 2

முந்திரி பருப்பு - 10 எண்ணிக்கை

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

சக்தி கறி மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை பழம் - 1(சிறியது)

சோயா சாஸ் - ஒரு மூடி

தக்காளி சாஸ் - ஒரு மூடி

அஜினமோட்டோ - ஒரு பின்ச்

கார்ன் ப்ளார் மாவு - 1 தேக்கரண்டி

ரெட் கலர் பொடி - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். குடைமிளகாய், பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி பின் தனித்தனியாக பிரிக்கவும்

கோழியில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கறி மசாலா தூள், கார்ன் ப்ளார், ரெட் கலர் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கோழியை போட்டு பொரித்து எடுக்கவும்

அதேப் போல் எல்லா கோழித்துண்டுகளையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பின் எண்ணெயை அடி கப்பி இல்லாமல் வடிக்கவும். வடித்த எண்ணெயை கடாயில் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் கடாயில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாய், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.

அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், அஜினமோட்டோ போட்டு சிறிது நேரம் சிம்மில் வைத்து பின் பொரித்த கோழித்துண்டுகளை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

மல்லி இலை வறுத்த முந்திரி போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: