கேரட் முட்டை வறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட் - 200 கிராம்

வெங்காயம் - 1

முட்டை - 2

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) - தேவையான அளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட் தோல் சீவி கழுவி துருவவும். வாணலியில் எண்ணெயை கொதிக்க விடவும். கொதித்ததும் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.

பெருஞ்சீரகம்(சோம்பு), வெங்காயம் போட்டு தாளிக்கவும். அதில் துருவிய கேரட்டினை போட்டு அவிய விடவும்.

ஒரளவு அவிந்ததும் மிளகாய் தூள் போடவும். பின்பு முட்டையை போட்டு வறை போல பிரட்டவும்.

வறைபோல வந்ததும் தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்) சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: