கேப்சிகம் இறால் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 25

கேப்ஸிகம் - 1

வெங்காயம் - 1

வெள்ளை நல்ல மிளகு - 2 தேக்கரண்டி

எலுமிச்சை - 1

ஒன்றிரண்டாக அரைத்த மிளகாய் - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி

ஆயிஸ்டர் சாஸ் - 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)

அஜினோமோட்டோ உப்பு - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 3

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தப்படுத்தி அதனுடன் வெள்ளை மிளகு, எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், நசுக்கிய பூண்டு மற்றும் கேப்ஸிகம் போட்டு வதக்கவும்.

பாதி வதங்கியவுடன் அஜினோமோட்டோ உப்பு, சாஸ், மிளகாய் தூள், உப்பு போட்டு இறாலையும் சேர்க்கவும்.

இறால் வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்..

குறிப்புகள்: