கெண்டை மீன் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
கெண்டை மீன் - 3
தக்காளி - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனைச் சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.
மீன் துண்டுகளுடன் தூள் வகைகள், உப்பு மற்றும் தக்காளி சேர்க்கவும். (தக்காளியை பிசைந்து சேர்க்கவும்).
மீனுடன் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேரும்படி நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊறவைத்த மீன் துண்டுகளைப் போட்டு இரு புறமும் வேகும் வரை பொரித்தெடுத்து பரிமாறவும்.