கூனிப்பொடி பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கூனிப்பொடி - 1/4 கிலோ

முருங்கை கீரை - 1 கப்

கடுகு - 1/2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 1/2 கப்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 1 பல்

மிளகாய் வற்றல் - 3

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

கூனிப்பொடியை நன்றாக அலசி தண்ணீரை பிழிந்து வைக்கவும்.

முருங்கைக்கீரையை சுத்தம் செய்யவும்.

அரைக்க வேண்டியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூனிப்பொடி, முருங்கைக்கீரை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் அரைத்ததை போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: