கூந்தள் ரோஸ்ட்(squid)
தேவையான பொருட்கள்:
கூந்தள் மீன் - 1 கிலோ
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
பொடித்த சோம்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கூந்தள் மீனில் உப்பு கலந்து வைக்கவும். அப்பொழுதுதான் தோல் எளிதாக உரிந்து வரும். பிறகு தோலை லேசாக இழுத்தால் அப்படியே உரிந்து வரும்.
மேலுள்ள பகுதியை தோல் நீக்கி அப்படியே எடுக்கலாம். உள்ளில் இருந்து வரும் பகுதியில் கடைசி பகுதியை மட்டும் எடுக்கலாம். மீனின் உள் வருபவற்றை நீக்கி களைந்து விடலாம்.
பிறகு மீனை நன்கு கழுவி தண்ணீர் வடிய விடவும். (இல்லையென்றால் வேகும்பொழுது அதிக தண்ணீர் பெருகும்).
ஒரு குக்கரில் 3 தேக்கரண்டி எண்ணெய் காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பின் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோம்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி கூந்தள் மீனை சேர்க்கவும். பிறகு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
இப்பொழுது மீன் வெந்திருக்கும் அதிகம் தண்ணீர் காணப்படும். மூடியைத் திறந்து தண்ணீர் வற்றி ரோஸ்டாக வரும்வரை கொதிக்க விடவும்.
சுமார் 10 நிமிடம் வற்றவிட்டால் மிக சுவையான கூந்தள் ரோஸ்ட் தயார்.