குடல் பூ வதக்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குடல் பூ - ஒரு முழு குடலில் உள்ள பூ ( குடலை சுத்தம் செய்த பின் வெந்நீரில் முக்கி எடுத்து கத்தியால் சுரண்டினால் சுலபமாக வந்து விடும்)

சின்ன வெங்காயம் - 150 கிராம்

பச்சை மிளகாய் - 3 பெரிய அளவு

துருவிய தேங்காய் - 5 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய் தூள் -1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்

அடுப்பில சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், குடல் பூ, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

இலேசாக தண்ணீர் தெளித்து கொள்ளவும்.

நன்றாக வதங்கியதும் இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்: