கீரை முட்டை பொரியல்
0
தேவையான பொருட்கள்:
கீரை - 1 கட்டு
முட்டை - 2
சின்ன வெங்காயம் - 6
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், சுத்தம் செய்த கீரை, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
ஒரு கை தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும்.
கீரை வெந்தவுடன், முட்டைகளை உடைத்து, ஊற்றி நன்கு கிளறவும்.
முட்டை நன்கு வெந்து, தேங்காய் துருவல் போலானதும் சர்க்கரை தூவி இறக்கி பரிமாறவும்.