காளிஃபிளவர் முட்டை பொரியல்
0
தேவையான பொருட்கள்:
காளிஃபிளவர் நறுக்கியது - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 3
அடித்த முட்டை - 1
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், காளிஃபிளவர், மிளகு தூள், உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
காளிஃபிளவர் வெந்ததும், அடித்த முட்டையை பரவலாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளரி, முட்டை வெந்ததும் எடுத்து பரிமாறவும்.