காலிப்ளவர் முட்டை ஃப்ரை





தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் - 1
முட்டை - 2
மசாலா தூள் - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தனியா தூள் - 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காலிப்ளவரை பெரிய துண்டுகளாக்கி லேசாக உப்பு சேர்த்து முக்கால் வேக்காடு வேகவைத்துக்கொள்ளவும்.
பின் முட்டையை நன்கு அடித்து அதில் உப்பு, மசாலா தூள்,மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாதூள், அரைத்த பச்சைமிளகாய் விழுது, இவற்றை சேர்த்து நன்கு கலக்கி வேகவைத்த காலிப்ளவரை ஒவ்வொன்றாக முக்கி எண்ணெயை சூடாக்கி பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.