கார கோழி இறைச்சி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி இறைச்சி எலும்பு இல்லாதது - 1/2 கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 4

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

எண்ணெய் - 6 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பொடி செய்ய:

பூண்டு - 10 பல்

சோம்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகாய், சோம்பு, சீரகம் இவற்றைப் போட்டு, மிதமான தீயில் வெடித்தவுடன், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

நறுமணம் வந்தவுடன், கோழி இறைச்சியை கலந்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

இப்போது மிளகாய்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளற வேண்டும். நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் பிரட்ட வேண்டும்.

பூண்டு சோம்பு பொடியை கலந்து ஒரு நிமிடம் கிளறி, நீர் தெளித்து 5 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும்.

கோழி வெந்தவுடன், தக்காளியை கலந்து ஒரு நிமிடம் பிரட்டி, கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: