கார்லிக் சிக்கன் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கிலோ

பூண்டு - 30 பல்

சோள மாவு - 3 மேசைக்கரண்டி

அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

டிப்பிங் சாஸ் செய்ய:

மிளகாய் வற்றல் அல்லது பழுத்த மிளகாய் - 10

சின்ன வெங்காயம் - 4

தக்காளி - 1

சர்க்கரை - 1 தேக்கரண்டி

டார்க் சோயா சாஸ் - 1 தேக்கரண்டி (கெட்டியாக இனிப்பாக இருக்கும்)

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி சோளமாவு, அரிசி மாவு, சோயா சாஸ், உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பூண்டை லேசாக தட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி தட்டிய பூண்டை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

அதே எண்ணெயில் கோழி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு டீப் ஃப்ரை செய்து எடுக்கவும்.

டிப்பிங் சாஸ் செய்ய:

கொடுக்கப்பட்ட பொருட்களை (எண்ணெய், சோயாசாஸ் தவிர) மிக்ஸியில் அரைத்து எண்ணெயில் வதக்கி சோயா சாஸ் சேர்க்கவும்.

பொரித்த பூண்டு, கோழி துண்டுகளை பரிமாறும் தட்டில் வைத்து டிப்பிங் சாஸுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: