காடை ரோஸ்ட்
தேவையான பொருட்கள்:
காடை - 6
பல்லாரி (பெரிய வெங்காயம்) - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - 1 தேக்கரண்டி
சீரக பொடி - 1 தேக்கரன்டி
மிளகு பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காடையை சுத்தம் செய்து துண்டங்கள் போட்டுக் கொள்ளவும்
பின்பு அனைத்து மசாலா பொருட்கள் மற்றும் வினிகர், உப்பு ஆகிய பொருட்களை போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பின்பு வெங்காயத்தை நீளவாகில் அரியவும், பச்சை மிளகாயையும் நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பிறகு அதே வாணலியில் பிரட்டி வைத்துள்ள காடையை போட்டு கிளறவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்.
தண்ணீர் வற்றி வரும் தருவாயில் பொரித்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை அதன் மேல் தூவவும்.
காடையையும் மசாலாவும் சிவந்த நிறமாகும் வரை பொரித்து எடுத்து பரிமாறவும்.