கறி வறுவல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறி - 1/2 கிலோ

வெங்காயம் - 2

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1/2 கப்

பட்டை - 1 அங்குலத்துண்டு

வற்றல் மிளகாய் - 7

தனியா - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கை

எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறியை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்னெயை ஊற்றி சூடாக்கவும்.

வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து சிறு தீயில் சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

பின் கறி, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பிறகு அரை கப் நீர் சேர்த்து உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.

கறி பாதி வெந்ததும் மிளகாய், தனியா, சீரகத்தைநன்கு மையாக அரைத்துச் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

தேங்காய், சோம்பு, கசகசாவை மையாக அரைத்து கறிவேப்பிலையுடன் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கொதிக்கவிட்டு வறுவல் சிறிது கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: