கறி மிளகு பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி - 1/4 கிலோ

பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப்

நல்ல மிளகு - 25 கிராம்

சோம்பு - 1 தேக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2

செய்முறை:

ஆட்டுக்கறியை நன்றாக கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய் துருவல், நல்ல மிளகு, சோம்பு இவற்றை மையாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் நல்லெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து பின் வேகவைத்த ஆட்டுக்கறியை சேர்த்து பிரட்டவும்.

2 நிமிடம் கழித்து அரைத்த விழுதை சேர்த்து, குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கலவை கொதித்து வற்றி வரும் போது பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்தமல்லித் தழை தூவி அடி பிடிக்காமல் பிரட்டி விடவும், கெட்டியான (வறண்ட) உடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: