கறி சுக்கா வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறி - 1 கிலோ

வெங்காயம் - 2

இஞ்சி விழுது - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியாத்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 4

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 1/2 கோப்பை

உப்புத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

கறியை சிறிய துண்டுகளாக்கி உப்பு ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி போட்டு ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி தண்ணீர் சுண்டும் வரை வேகவைக்க வேண்டும்.

சட்டியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, இரண்டு துண்டு பட்டை, ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெந்த கறியை அதில் போட்டு நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு மற்றும் எல்லாத்தூளையும், போட்டு உப்புத்தூளையும் போட்டு நன்கு வறுக்கவும்.

பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு கிளறிவிட்டு இறக்கிவிடவும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது எண்ணெயில் போட்டு பொரித்து அதை மேலாக தூவி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: