கறிவேப்பிலை இறால் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 1 கப்

கறிவேப்பிலைப் பொடி - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலைப் பொடி தயாரிக்க:

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

காய்ந்த மிளகாய் - 3

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை

சீரகம் - 1 தேக்கரண்டி

செய்முறை:

இறாலைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலைப் பொடி தயாரிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலைப் போட்டு, அத்துடன் கறிவேப்பிலைப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசறி அரை மணி நேரம் வைத்திருக்கவும்.

தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, இறாலைப் போட்டு இருபுறமும் வேகும் வரை பொரிக்கவும்.

2 நிமிடங்களில் வெந்துவிடும். வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

க்ரிஸ்பியாக விரும்புபவர்கள் டீப் ஃப்ரை செய்யலாம்.

இறாலை 2 நிமிடங்களுக்கு மேல் சமைக்கக் கூடாது.