கருவாடு வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நடுத்தர அளவு கருவாடு - 1

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 2 பல்

மிளகாய் வற்றல் - 4

கறிவேப்பிலை - 2 கொத்து

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கருவாட்டை சுத்தம் செய்து அரைத்தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

ஆறியதும் முள் நீக்கி சதைப்பகுதியை மட்டும் உதிர்த்து வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய்வற்றல் ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைக்கவும்.

இடிகல் இருந்தால் அதில் இடித்தால் சுவை அதிகம். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காய கலவை கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.

பாதி வதங்கியதும் உதிர்த்த கருவாடு சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து முறுகலாகும் வரை கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: