உருளை கோஸ் முட்டை பொரியல்
0
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளை கிழங்கு - 1
நறுக்கிய கோஸ் - 1/2 கப்
முட்டை - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம்,மிளகாய் நறுக்கி வைக்கவும்.
உருளைகிழங்கை உதிர்த்து வைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கி கோஸ்போட்டு வதக்கவும்.
கோஸ் வெந்தவுடன் உருளை போட்டு வதக்கி ,முட்டையை உடைத்து ஊற்றி கிளறி மஞ்சள்பொடி,மிளகுதூள்,கரம் மசாலா,உப்பு போட்டு நன்கு கிளறவும்.
எல்லாம் சேர்ந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.