உப்புக்கறி (செட்டிநாடு)
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 6
காய்ந்த மிளகாய் – 6
அரைக்க:
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பூண்டு - 4
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.
இதனுடன் மட்டன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள், உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக விடவும். என்னுடைய குக்கரில் மட்டன் வேக இருபது விசில் தேவை. அவரவர் குக்கருக்கு தகுந்தாற்போல் வேக விடவும்.
அரைக்க கொடுத்தவற்றில் முதலில் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின் அதனுடன் பூண்டு சேர்த்து அரைக்கவும்.
மட்டன் வெந்து ஆவி வெளியானதும் குக்கரை திறந்து அரைத்த மசாலாவை மட்டனுடன் சேர்க்கவும்.
நன்றாக மசாலாவுடன் மட்டனை சுருள கிளறி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதற்கு சின்ன வெங்காயம் தான் சேர்க்க வேண்டும். நான் இருக்கும் இடத்தில சின்ன வெங்காயம் கிடைக்காததால் பெரிய வெங்காயம் சேர்த்துள்ளேன்.
சின்ன வெங்காயம் இருந்தால் நான்கு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி சேர்க்கவும்.