உப்புக்கறி
தேவையான பொருட்கள்:
கறி - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1
மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 5
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சோம்பு, சீரகம், மஞ்சள் தூள், கசகசா, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் அரைத்து கறியில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பை தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி, கறிவேப்பிலை போட்டு கறிக்கலவை கொட்டி நன்கு கிளற வேண்டும். வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூட வேண்டும்.
தண்ணீர் வற்றியவுடன் மிளகு தூள் சேர்த்து தீயை குறைத்து 10 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.