ஈஸி முட்டை பொரியல்
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க சிறிது
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது (விரும்பினால்)
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில் பொடியாக நறுக்கின வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதில் முட்டை கலவை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
அடிக்கடி கிளறிவிட்டு நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.