ஈஸி சிக்கன் சாப்ஸ்
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
மிளகாய் - 10
மிளகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1/2 அங்குலம்
தேங்காய் சில் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகாய், மிளகு, சோம்பு, சீரகம், தேங்காய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை மையாக அரைத்து சிக்கனில் பிசறி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பிசறிய சிக்கனை போட்டு கிளறி உப்பு சேர்க்கவும்.
சிறு தீயில் கிளறி மசாலா சிக்கனில் ஒட்டி தனித்தனியாக சிக்கன் வந்ததும் இறக்கி பரிமாறவும்.