ஈஸி சிக்கன் ஃபிரை
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை - 1
பட்டை, லவங்கம் - 1
ஏலக்காய் - 3
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழி எலும்போடு பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வாசம் போக வதக்கவும்.
இதில் சிக்கன் சேர்த்து மூடி வேக விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் போதுமானது.
சில நேரம் சிக்கனில் நீர் விடா விட்டால், 1 கப் தண்ணீர் சேர்க்கவும்