ஈஸி கோழி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி கறி - 500 கிராம்

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

தயிர் - 1 மேசைக்கரண்டி

நல்லெண்ணைய் - 10 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் - 5

சீரகம் - 2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

கோழித்துண்டுகளை தயிரில் தேவையான உப்பு போட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும்.

அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து வைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி சூடேறியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அத்துடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும்.

பின் ஊற வைத்த கோழியை போட்டு நன்றாக கிளறவும்.

மூடி வைத்து அவ்வப்போது கிளறி எண்ணைய் மேலெ மிதந்து வரும் வரை சமைத்து இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்: