ஈஸி காலிஃப்ளவர் முட்டை பொரியல்
0
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
முட்டை - 1
சிக்கன் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காலிஃப்ளவரை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவர் மற்றும் உப்பு போட்டு வதக்கவும். வதக்கும் போது காலிஃப்ளவரிலிருந்து தண்ணீர் வரும்.
காலிஃப்ளவர் வெந்ததும் சிக்கன் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
அதன் பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட்டு வெந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும்.