ஈரல் வறுவல் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கறிமசலா தூள் - 2 தேக்கரண்டி

எண்ணய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஈரலை சுத்தம்செய்து சிறிதாக நறுக்கிவைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

மிளகாயை இரண்டாக நறுக்கிவைக்கவும்.

வாணலியில் எண்ணய் ஊற்றி வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் ஈரலைபோட்டு உப்பு சேர்த்து பிரட்டவும்.

மஞ்சள் தூள், கறிமசால் தூள் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

தண்ணீர் வற்றி ஈரல் வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: