ஈரல் வறுவல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் - 1/2 கிலோ

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - இரண்டு

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

வர மிளகாய் - 3

இஞ்சி & பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

பட்டை, இலை - தாளிக்க

எண்ணை - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்கவும். தண்ணீர் முழுவதும் சுண்டி விடும். அப்படியே சிறிது தண்ணீர் இருந்தாலும் பரவாயில்லை. கொட்ட வேண்டாம்.

மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்கவும்.

வெங்காயத்தை நீள நீளமாக வெட்டி வைக்கவும். ப. மிளகாயை சிறிதாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்கவும்.

வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

சிவந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை போடவும்.

இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, ம.பொடி, ஒரு தேக்கரண்டி உப்பு மூன்றையும் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்கவும்.

அடிக்கடி திறந்து கிளறி விடவும். தண்ணீர் வற்றியதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: