ஈரல் மிளகு வறுவல்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஆட்டீரல் - 1/4 கிலோ

வெங்காயம் - 3

இஞ்சி - 1/4 அங்குலத் துண்டு

பூண்டு - 2 பற்கள்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டீரலுடன் மல்லித் தூள், சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அத்துடன் மீதமுள்ள மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.

பிறகு ஊற வைத்துள்ள ஈரல் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: