ஈசி முட்டை ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
முட்டை- 4
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -2 தேக்கரண்டி
கரம் மசாலா -1 தேக்கரண்டி
ஜீரக தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டை வேக வைத்து ஒட்டை நீக்கி,இரண்டாக கட் செய்து வைத்துகொள்ளவும்.
எண்ணெய் தவிர அனைத்து பொடிகளையும் கலந்து வைத்துகொள்ளவும்.
அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும். அதில் முட்டையை ஒவ்வொறாக வைத்து அதன் மேல் கலந்து வைத்திருக்கும் பொடியை தூவவும்.
பின் ஒவ்வொரு முட்டையாக திருப்பி போட்டு மீண்டும் பொடிகளை தூவவும்.பின் அடுப்பை அணைத்து விட்டு பரிமாறவும்.