ஈசி மட்டன் ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
கறி - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள்- 1 தேக்கரண்டி
கரம் மசாலா- 1 தேக்கரண்டி
தயிர் - 3 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கறியை நன்றாக கழுவவும்
அதில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத் தூள், கரம் மசாலா, தயிர், இஞ்சி பூண்டு விழுது போட்டு கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 வீசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின்பு வேக வைத்த கறியை சேர்த்து வதக்கவும். சிம்மில் வைத்து பொரிய விட்டு பரிமாறவும்.