இறைச்சி தோரன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்திய ஆட்டிறைச்சி (கீமா) - 1/2 கிலோ

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்த் துருவல் - 3/4 கப்

மிளகாய் வற்றல் - 5

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 2 தேக்கரண்டி

பூண்டு - 2 பற்கள்

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:

அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

அதனுடன் கீமாவைச் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.

கறி வெந்து தண்ணீர் வற்றியதும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.

2 - 3 நிமிடங்கள் கிளறிவிட்டு, கறிவேப்பிலையைத் தேங்காய் எண்ணெயில் தாளித்து சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: