இறால் வறுவல் (1)
தேவையான பொருட்கள்:
பெரிய இறால் - 10
மஞ்சள் தூள் - 1/2 மேசைக்கரண்டி
சோம்பு தூள் - 1/2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 1/4 மேசைக்கரண்டி
சீரக தூள் - 1/2 மேசைக்கரண்டி
சக்தி மீன் மசாலா தூள் - 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 1/2 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - 1/2 மேசைக்கரண்டி
தேங்காய் விழுது - 1 மேசைக்கரண்டி
லெமன் ஜூஸ் - 2 சொட்டு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலுடன் இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், மிளகு தூள், சக்தி மீன் மசாலா தூள், தேங்காய் விழுது, உப்பு, லெமன் ஜூஸ் எல்லாவற்றையும் போட்டு கலந்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை போடவும். 20 நிமிடம் வேக விடவும் இரண்டு பக்கமும் திருப்பி போடவும். வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்த்து பரிமாறவும்.