இறால் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 10 பற்கள்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலைச் சுத்தம் செய்து வைக்கவும். பூண்டைத் தோலுரித்து நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

இறாலுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அத்துடன் பூண்டை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பிறகு சின்ன வெங்காயத்தைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும். (விரும்பினால் சின்ன வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கலாம்).

பிறகு ஊற வைத்த இறாலைச் சேர்த்து மேலும் 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும். வெந்ததை சரிபார்த்து அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: