இறால் பொடிமாஸ் (1)
0
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 5,
பூண்டு - 8 பல்,
இஞ்சி - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 3 தேக்கரண்டி.
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து வேக வைத்து, பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பின் பொடியாக நறுக்கிய இறால், உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உதிர் உதிராக வரு வரை கிளறி இறக்கவும்.
சுவையான இறால் பொடிமாஸ் ரெடி.