இறால் பொடிமாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - ஒரு கொத்து

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1/4 கப்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை தோல் உரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தேங்காய், சோம்பு இரண்டையும் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு அதனுடன் இறாலை போட்டு ஒரு நிமிடம் வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு 3 நிமிடம் பிரட்டி விடவும்.

அதில் அரைத்த தேங்காய் சோம்பு விழுது போட்டு நன்கு பிரட்டி விடவும்.

4 நிமிடம் கழித்து மேலே கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்..

குறிப்புகள்:

மிளகாய் தூள் சேர்க்காமல் பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து செய்யலாம்.