இறால் சம்பால்
0
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
மிளகாய் வற்றல் - 15
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
மிளகாய் வற்றலை வெந்நீரில் ஊற வைக்கவும்.
ஊறவைத்த மிளகாய் வற்றலோடு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து மையாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி அரைத்த கலவை, உப்பு, சர்க்கரை சேர்த்து பச்சை வாசனை போக 5 முதல் 10 நிமிடம் வதக்கவும்.
இறாலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச்சாறு கலந்து மேலும் 1 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
ரசம் சாதம், தயிர் சாதம், நெய்சாதத்தோடு சுவையாக இருக்கும்.