இறால் கிழங்கு பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 250 கிராம்

உருளைக்கிழங்கு - 150 கிராம்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

தக்காளி - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

மிளகு சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 4 அல்லது 5 தேக்கரண்டி

உப்பு - 3/4 ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு சீரகுத்தூள், உப்பு போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கை ஒரு இன்ச் அளவில் கட்டம் கட்டமாக வெட்டிக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அவற்றை இறாலோடு சேர்த்து ஒரு வாணலியில் போட்டு, 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

சுமார் 5 நிமிடம் கழித்து, கிழங்கு வெந்துவிட்டதை உறுதி செய்த பிறகு அடுப்பை அணைத்து பரிமாறவும்..

குறிப்புகள்:

இது ரசம், சாம்பார் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.