ஆம்லெட் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 5

பெரிய வெங்காயம் - 3

பச்சைமிளகாய் - 5

பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு - 2

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 150 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானவுடன் வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் வதக்கி முட்டையுடன் சேர்த்து உப்பு கலந்து தோசையாக ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.

அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அத்துடன் சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு முட்டை துண்டுகளை அதனுடன் சேர்த்து கொஞ்சம் நேரம் அடுப்பில் வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: