ஆப்ரிக்கன் ப்ரான் பிரை
0
தேவையான பொருட்கள்:
டைகர் இறால் - 10-15
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
அரைத்த புதினா விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1/2 தேக்கரண்டி
கார்ன்மாவு - 1 மேசைக்கரண்டி
மைதா - 1 மேசைக்கரண்டி
கேசரி கலர் - 1 பின்ச்
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இறாலின் முன் பகுதியின் தோலை மட்டும் உரித்து வால் பகுதியின் தோலை விட்டு விடவும்.
நன்கு சுத்தம் செய்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து நீர் சேர்க்காமல் வேக வைத்துக்கொள்ளவும்.
இறாலில் புதினா பேஸ்ட்டை தடவவும்
கேசரிகலர், மைதா, கார்ன்மாவை மூன்றையும் நன்கு கலந்து இறாலில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து பரிமாறவும்.
குறிப்புகள்:
பிரஞ்ச் பிரைஸுடன் பரிமாறவும்.