ஆட்டு மூளை பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு மூளை - 2 என்னம்

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 1/2 கப்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணைய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் சோம்பை நைத்துப் போட்டு சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.

பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் கொட்டி மிகவும் மெதுவாக கிளறவேண்டும். நன்றாக சிவந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: