ஆட்டுக்கறி வறுவல்
தேவையான பொருட்கள்:
எலும்பு நீக்கப்பட்ட ஆட்டுக்கறி - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 3/4 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 3/4 தேக்கரண்டி
பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 20 இலைகள்
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் பொரிக்க - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஆட்டுக்கறியை நன்கு கழுவி ஒரு வடிகட்டியில் போட்டு நன்கு தண்ணீர் வடிய விடவும்.
சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் போட்டு ஒரு கைப்பிடி தண்ணீரை லேசாக தெளித்து மிதமான தீயில் ஒரு விசில் வரவிடவும். (கறி பாதியளவு வெந்தால் போதும்)
வெந்த கறியில் தண்ணீர் இருந்தால் அதை வடித்து விட்டு பின் அதில் மற்ற பொருட்களாகிய மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி,பூண்டு சேர்த்து நன்கு பிரட்டி 2 மணிநேரம் ஊறவிடவும்.
ஊறினால் உப்பு நன்கு பிடித்திருக்கும். பிறகு அதில் வெங்காயம், கறிவேப்பிலை கலந்து வைக்கவும்.
பிறகு எண்ணெயை ஒரு பரந்த பானில் காயவைத்து அதில் தேவையெனில் அரை தேக்கரண்டி சோம்பு போட்டு பொரிய விடவும்.
பின் அதில் மாசாலா சேர்த்த கறித் துண்டுகளை போட்டு கிளறி 5 நிமிடம் கழித்து தீயை நன்கு குறைத்து விட்டு மூடி போட்டு விட்டு மற்ற வேலைகளை கவனிக்கவும். 5 நிமிடத்திற்கொருமுறை கிளறி விடவும்.
ஏறக்குறைய 25 நிமிடங்களில் சூப்பரான மொறுமொறுவென இருக்கும் மட்டன் வறுவல் ரெடியாகும்.